LPL T20 2ஆம் தொடருக்கான வௌிநாட்டு வீரர்களுக்கான பதிவுகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன.

வௌிநாட்டு வீரர்களை பதிவுசெய்யும் நடவடிக்கைகள் நாளை (21-06-2021) முதல்  எதிர்வரும் 27 ஆம் திகதி (27-06-2021) நள்ளிரவு 12 மணிக்கு வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.

வௌிநாட்டு வீரர்கள் தங்களைப் பதிவுசெய்துகொள்வதற்காக இலங்கை கிரிக்கெட்டின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் அதற்கென்று தனியான ஒரு இணைப்பையும் உருவாக்கியுள்ளது.

பதிவுசெய்து கொள்ளும் அனைத்து வீரர்களும் அவரவர்களின் தகைமைக்கேற்ப  LPL குழாத்திற்குள் உள்வாங்கப்படுவார்கள் என இலங்கை கிரிக்கெட் மேலும் அறிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தேசிய தெரிவாளர்களினால் தெரிவுசெய்யப்பட்டு  LPL அணிகளுக்குள் உள்வாங்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LPL 2 ஆம் தொடர் போட்டிகள் எதிர்வரும் ஜூலை மாதம்  30 ஆம் திகதி முதல் ஓகஸ்ட் மாதம் 22 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


​மேலதிக தகவல்களுக்காக:

SLC announce the Player Registration Process for the 2nd Edition of the Lanka Premier League

LPL 2nd Edition to be held in 30th July to 22nd August 2021

Post a Comment

Previous Post Next Post