நாட்டில் கொவிட்-19 பரவலையடுத்து விதிக்கப்பட்டுள்ள சுகாதார சட்ட விதிமுறைகளை மீறி நடத்தப்படும் திருமண நிகழ்வுகள் தொடர்பில் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பொது சுகாதாரப் பரிசோதகர்களின் சங்கம் அறிவித்துள்ளது.

சுகாதார வழிக்காட்டல்களை மீறி நடத்தப்பட்டுள்ள திருமண நிகழ்வுகள் பற்றிய நிழற்படங்கள் தமது சங்கத்திற்கு கிடைத்துள்ளதாகவும் பொது சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இதன் பிரகாரம் எதிர்காலத்தில் நடத்தப்படவுள்ள திருமண நிகழ்வுகளை கண்காணிப்பிற்கு உட்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

(Kandy Tamil News)


Post a Comment

Previous Post Next Post