நாட்டின் சகல மாவட்டங்களிலும் டெல்டா தொற்றுக்குள்ளானவர்கள் இருக்கலாமென சுகாதாரத் தரப்பு தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட ஒரு வீதத்திலான டெல்டா தொற்றாளர்கள் இருக்கக்கூடும் என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் கூறியுள்ளார்.
டெல்டா தொற்று ஏற்பட்டவர்கள் மூலம் குறிப்பிட்ட பகுதிகளில் ஏனையோருக்கும் மிக வேகமாக வைரஸ் தொற்று ஏற்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலைமையின் கீழ் டெல்டா தொற்று மேலும் பரவுவதைத் தடுப்பதற்கன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Post a Comment