தேயிலை உட்பட வாசனைத் திரவியங்கள் ஏற்றுமதி குறித்து இலங்கை மற்றும் பாகிஸ்தான் இடையே விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதன் ஒரு கட்டமாக இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலய வர்த்தக மற்றும் முதலீட்டு இணைப்பாளர் அஸ்மா கமால், காலி மாவட்ட வர்த்தக மற்றும் தொழில்துறை அலுவக பிரதானிகளை சந்தித்து கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பில் காலி மாவட்ட வர்த்தக மற்றும் தொழில்துறை அலுவலகத் தலைவர், தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் அதன் முக்கிய உறுப்பினர்கள் பிரசன்னமாகியிருந்தனர்.

காலி பிராந்தியத்தின் தேயிலை மற்றும் வாசனை திரவிய பொருட்கள் (மசாலா) ஏற்றுமதி தொடர்பாக இந்த சந்திப்பின்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.

மருந்து வகைகள், சுற்றுலா மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவைகள் போன்ற  துறைகளில் பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு இடையிலான இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post