40 இலட்சம் தென்னங்கன்றுகளை நடும் வீட்டுக்கு வீடு நிகழ்ச்சித் திட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சித் திட்டம் சிலாபம், பெருந்தோட்ட நிறுவனத்திற்குச் சொந்தமான தங்கொட்டுவ - புஜ்ஜம்பொல, வெலிகெட்டிய தோட்டத்தில் இன்று (10) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
வருடாந்தம் சுமார் 2800 மில்லியன்களாக உள்ள தேங்காய் அறுவடையை, 3600 மில்லியன் தேங்காய் அறுவடையாக மாற்றுவதற்கு இந்த திட்டம் மூலம் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
இந்த தேசிய திட்டத்திற்கு அமைவாக நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கிய வகையில் தென்னங்கன்றுகளை நடுதல் மற்றும் கன்றுகளை விநியோகித்தல் என்பன, அனைத்து அமைச்சுகளினாலரும் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

Post a Comment