வவுனியா பொதுச் சந்தையிலுள்ள வர்த்தகர்கள் மற்றும் பணியாளர்கள் 112 பேருக்கு PCR பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

வவுனியா பொதுச் சந்தையிலுள்ள சிலருக்கு கடந்த வாரம் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, பொதுச் சந்தையிலுள்ள வர்த்தக நிலையங்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தன.

இந்த நிலையில், மேலும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் சந்தைத் தொகுதியுள்ள வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள், பணிபுரிவோர் என 112 பேரிடம் சுகாதார தரப்பினர் இன்று PCR பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

இவர்களின் PCR பரிசோதனை முடிவுகள் கிடைத்த பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கைகளை சுகாதார தரப்பினர் முன்னெடுக்கவுள்ளனர்.



Post a Comment

Previous Post Next Post