கொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் அமைந்துள்ள தொடர் மாடிக் குடியிருப்பொன்றில் தீ பரவியுள்ளதாக கொழும்பு தீயணைப்பு சேவைகள் பிரிவு குறிப்பிடுகின்றது.
கொட்டாஞ்சேனை - மேபீல்ட் பகுதி தொடர் மாடிக் குடியிருப்பில் இன்றிரவு தீ பரவியுள்ளது.
குடியிருப்பின் மின் விநியோகக் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த தீ பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
தீயைக் கட்டுப்படுத்துவதற்காக இரண்டு தீயணைப்பு வாகனங்களை சம்பவ இடத்திற்கு அனுப்பியுள்ளதாக கொழும்பு தீயணைப்பு சேவைகள் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
தீயினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து இதுவரை தகவல்கள் வௌியாகவில்லை என்பதுடன், கொட்டாஞ்சேனை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Post a Comment