பாகிஸ்தானுக்கான ஆப்கானிஸ்தான் தூதுவரின் மகள் அடையாளம் தெரியாத சிலரால் கடத்தப்பட்டதுடன், அவரைத் தாக்கி காயங்களுக்குள்ளாக்கியள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமைந்துள்ள இல்லத்திற்கு சென்றுகொண்டிருந்த வழியில் ஆப்கானிஸ்தான் நாட்டின் தூதுவரது மகள் சில்சிலா அலிகில் கடத்தப்பட்டதுடன், பல மணி நேரமாக தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக சர்வதேச தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.
ஆப்கானி்ஸ்தான் தூதுவரது மகள் கடுமையாக தாக்கி காயங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் ஆப்கானிஸ்தான் வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டுத் தூதுவரின் மகளான சில்சிலா அலிகில் 20 வயதுடையவர் என்பதுடன், அவர் தனது காரில் சென்றுகொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே அவர் கடத்தப்பட்டிருந்தார்.
Tags:
#afghanistan #afghanistanpics #afghanistanyouneversee #afghanistanwar #afghanistani #AfghanistanVeteran #afghanistanhistory #AfghanistanHipHop #Afghanistandaily #Afghanistanchildren #Afghanistaninmyheart #afghanistanlife #Afghanistanphotos #afghanistanbeforethewar #afghanistanrefugees #AfghanistanTransportation #afghanistanbeauty #afghanistanarmy #afghanistan1960

Post a Comment