இலங்கையில் இதுவரை பயன்படுத்தப்படாத 3 புதிய வகை கொவிட் தடுப்பூசி மருந்துவகைகளை கொண்டுவருவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

Pfizer உட்பட மூன்று புதிய கொவிட் தடுப்பூசி மருந்துகளை இரண்டு வாரங்களுக்குள் இலங்கைக்கு பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களுக்கு அவர் குறிப்பிட்டார்.

இலங்கையில் இதுவரை பயன்படுத்தாத மூன்று வகையான புதிய கொவிட் தடுப்பூசி மருந்து வகைகள் மற்றும் Pfizer, Sinovac ஆகிய மருந்துகளையும்  நாட்டிற்குக் கொண்டுவர அரசாங்கம் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.

இதேவேளை, ஜூலை மாதம் இரண்டாம் வாரமளவில் நாட்டில் இருக்கின்ற 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஒரு தடுப்பூசி மருந்தேனும் ஏற்றப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Post a Comment

Previous Post Next Post