குறைந்த வருமான மட்டத்திலுள்ள குடும்பங்களுக்கு 5000/- ரூபா கொடுப்பனவை பகிர்ந்தளிக்கும் செயற்பாடுகளை புறக்கணித்திருந்த கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் தமது முடிவைத் தளர்த்தியுள்ளது.

கொவிட்-19 வைரஸ் பரவுவதையிட்டு ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் மக்களுக்கு நிவாரணமாக 5000/- ரூபாவைக் கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது.

இந்த நடவடிக்கைகள் கிராம உத்தியோகத்தர்கள் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், சுற்றறிக்கை கோளாறு காரணமாக நாடளாவிய ரீதியில் இந்த செயற்பாடுகளில் இருந்து ஒதுங்குவதற்கு அகில இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் நேற்றைய தினம் (16) தீர்மானித்தது.

எனினும், அதிகாரிகளுடன் இன்று (17) நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் தங்களின் தீர்மானத்தை கைவிட கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் தீரமானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post