கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளான 11 பேர் இன்றைய தினம் (24) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இந்த எண்ணிக்கை இன்று மாலை 5.10 க்கு வௌியிடப்பட்ட அரச தகவல் திணைக்கள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த 11 நோயாளர்களும் தனிமைப்படுத்தல் நிலையங்கள் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டிருந்தவர்கள் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட நிபுணர் டொக்டர் அனில் ஜாசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
இவர்கள் அனைவரும் கொழும்பு 12 இல் அமைந்துள்ள பண்டாரநாயக்க மாவத்தை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.
இதன் பிரகாரம் இலங்கையில் கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 379 ஆக அதிகரித்துள்ளது.

Post a Comment