​கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் மே மாதம் 04 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 5 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் ஏனைய மாவட்டங்களில் ஏப்ரல் 27 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 5.00 மணிக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டு இரவு 8.00 மணிக்கு மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்.

அதன் பின்னர் இந்த மாவட்டங்களில் மீண்டும் மே மாதம் 01 ஆம் திகதி வௌ்ளிக்கிழமை வரை இரவு 8.00 மணிமுதல் அதிகாலை 5.00 மணிமரை ஊரடங்கு அமுல்படுத்தப்படும்.

இதேவேளை, கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் உள்ள அரச, தனியார் துறைகளைச் சேர்ந்த கைத்தொழிற் சாலைகள், கட்டட நிர்மாணப் பணிகள், சேவையிடங்கள், மரக்கறி, மீன் மற்றும் சில்லறை வர்த்தகங்களை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.



Post a Comment

Previous Post Next Post