ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சகோதரரான ரியாஜ் பதியுதீன் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைதுசெய்யப்பட்டார்.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் அவர் சந்தேகத்தின் பேரில் இன்று (14) கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பொலிஸ் அத்தியட்சகருமான ஜாலிய சேனாரத்ன குறிப்பிடுகின்றார்.

புத்தளம் பகுதியில் வைத்து குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் ரியாஜ் பதியுதீன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கடந்த வருடம் ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டல்கள் மீது நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவந்த புலனாய்வுப் பிரிவினராலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post