கொவிட் -19 வைரஸ் தொற்றுக்குள்ளாகி நேற்று உயிரிழந்த மருதானையைச் சேர்ந்த நபரின் உறவினர்கள் இருவருக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து இன்று (02) காலை உறுதிசெய்யப்பட்டதாக இராணுவத் தளபதி லெப்டினண்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த நபருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தவர்கள் மற்றும் அவர்கள் நெருங்கிப் பழகிய சுமார் 300 பேர் வரையில் புலனாய்வுப் பிரிவினரால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.

இவர்கள் 300 பேரும் உடனடியாக இராணுவத்தினரால் முன்னெடுத்துச் செல்லப்படும் தனிமைப்படுத்திக் கண்காணிக்கும் நிலையத்திற்கு இன்று அழைத்துச் செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பேருவளை பகுதியிலும் கொவிட்-19 தொற்றுக்குள்ளான நபர்களுடன் நெருங்கிப் பழகிய 226 பேர் புனானை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு நேற்று அனுப்பிவைக்கப்பட்டதாகவும் இராணுவத் தளபதி கூறியுள்ளார்.

மேலும் புத்தளம் பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்ட நபருடன் நெருக்கமாக பழகிய 30 பேரும் நேற்றைய தினத்தில் அந்த மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post