இலங்கையில் கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருந்த நிலையில் சிகிச்சை பெற்றுவந்தவர்களில் 5 பேர் இன்றைய தினம் (09) பூரண குணமடைந்துள்ளனர்.

இதுதவிர இன்று ஒரேயொரு நபருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை பதிவாகியதாக சுகாதார அமைச்சு தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

இதற்கமைய இலங்கையில் கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளானமை உறுதிசெய்யப்பட்டவர்களில் 25 வீதமானோர் பூரண குணமடைந்துள்ளனர்.

இதேவேளை, இதுவரை 190 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்தமை பரிசோதனைகள் மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இவர்களில் 7 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதுடன், இதுவரை மொத்தம் 49 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வௌியேறிச் சென்றுள்ளனர்.

134 பேர் வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.


Post a Comment

Previous Post Next Post