இலங்கையில் கொவிட்-19 வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 334 ஐத் தாண்டியுள்ளது.

வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை நேற்றிரவு வரையில் 330 ஆகக் காணப்பட்டது.

எனினும், தேசிய தொற்று நோய் தொடர்பான விஞ்ஞானப் பிரிவினால் இன்றைய தினம் (23) மேலும் 04 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து நோயாளர்களின் மொத்த எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளான 222 பேர் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இதேவேளை, சிகிச்சைகளின் பின்னர் இதுவரை பூரண குணமடைந்த 105 பேர் வைத்தியசாலைகளில் இருந்து வௌியேறியுள்ளனர்.

கொவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக நாட்டில் இதுவரை 07 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

Previous Post Next Post