கொவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் பயணிகள் விமான சேவைகள் மே மாதம் 15 ஆம் திகதி வரை தொடர்ந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் இதுகுறித்து அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளது.



எனினும், சர்வதேச ரீதியான சரக்கு விமான சேவைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

குறிப்பாக அத்தியாவசிய விநியோகப் பொருட்களான மருந்து வகைகள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட மருத்துவ தேவைகள் தமது சரக்கு விமான சேவைகள் ஊடாக அரசாங்கத்திற்கு ஒத்துழைக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தௌிவுபடுத்தியுள்ளது.

அதேநேரம் நிர்க்கதியாகியுள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்துவரும் பணியிலும் அவசியம் கருதி தனது விமான சேவைகளை முன்னெடுத்து வருவதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.



Post a Comment

Previous Post Next Post