கொவிட்-19 வைரஸ் பரவக்கூடிய அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்ட கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் மறுஅறிவித்தல் வரை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் நாளை (06) காலை 6 மணிக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டு பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இந்த மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும்.

அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த வேறு நடவடிக்கைகளுக்காக மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது.

இதுதவிர கொழும்பு, களுத்துறை, கண்டி ஆகிய மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்டு பிரதேசங்கள் தொடர்ந்தும் அவ்வாறே கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இந்த பிரதேசங்களுக்குள் எவரேனும் உட்பிரவேசிப்பதற்கு அல்லது அங்கிருந்து வௌியியேறுவதற்கும் முற்றாக தடைவிதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



Post a Comment

Previous Post Next Post