கொரோனா வைரஸ் தொடர்பாக போலியான தகவல்களை சமூக ஊடகங்களில் வௌியிட்ட ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

குற்றப்புலனாய்வுத் திணைக்கள உத்தியோகத்தர்களால் இந்த நபர் இன்றிரவு 8.45 அளவில் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

குருணாகல், உஹுமிய பகுதியிலேயே இந்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

களுபோவிலை, தெஹிவலை பகுதியைச் சேர்ந்த 38 வயதாதன ஒருவரே குருணாகல் பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

சமூக ஊடகங்கள் மூலம் கொரோனா வைரஸ் தொடர்பில் போலியான தகவல்களை பிரசாரம் செய்த குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள இந்த நபரை, புதுக்கடை இலக்கம் - 01 நீதிமன்றத்தில் நாளை ஆஜர்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.



Post a Comment

Previous Post Next Post