இலங்கையில் ஒரே நாளில் கொரோனா தொற்றுக்குள்ளான அதிக எண்ணிக்கையானோர் இன்று (31) பதிவாகியுள்ளனர்.

இந்த வைரஸ் தொற்றுக்குள்ளான 20 பேர் இன்றைய தினம் 7.30 அளவில் பதிவாகியதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்றுநோய் தொடர்பான விஞ்ஞான பிரிவு தகவல் வௌியிட்டுள்ளது.

இதன்படி மொத்தமாக 142 பேர் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானமை  குறித்து உறுதிசெய்யப்பட்டுள்ளது

இதற்கமைய 123 பேர் தொடர்ந்தும் கண்காணிப்பின் கீழ் சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும் 17 பேர் சிகிச்சைகளின் பின்னர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வௌியேறியுள்ளனர்.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான இரண்டு பேர் இதுவரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



Post a Comment

Previous Post Next Post