ஊரடங்கு சட்டத்தை மீறி தொழுகையில் ஈடுபட்டதாக கூறப்படும் 18 பேரை ஹொரவப்பொத்தானை பகுதியில் பொலிஸார் இன்று (27) கைது செய்தனர்.

ஹொரவ்பொத்தானை, கிவ்லேகட பகுதியிலுள்ள பள்ளிவாசலில் இவர்கள் தொழுகையில் ஈடுபட்டிருப்பதாக கிடைத்த தகவலின் பிரகாரம் பொலிஸார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

இதன்போது பிரதேச செயலாளர், பிரதேச வைத்திய அதிகாரி ஆகியோரையும் பொலிஸார் அங்கு அழைத்துச் சென்று பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.

குறிப்பிட்ட தொழுகையில் சுமார் 80 பேர் வரையில் கலந்துகொண்டிருந்ததுடன், பொலிஸாரைக் கண்டு ஏனையோர் தப்பியோடிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனயைடுத்து ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றத்திற்காக அந்த பள்ளிவாசலின் பிரதம இமாம் மற்றும் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் உட்பட 18 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இமாம் மற்றும் பள்ளிவாசல் தலைவர் ஆகியோரை கடும் எச்சரிக்கையுடன் பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post