மின்சாரத்தை சிக்கனம் செய்யவும்....!!!

மின்சாரத்தை சிக்கனமாக பாவியுங்கள்... தேவைக்கேற்ப அதனைப் பயன்படுத்துங்கள்.... மேலதிகமாக எரிகின்ற மின்குமிழ்களை அணைத்து விடுங்கள்..

இப்படியெல்லாம் அர
சாங்கம் மக்களிடம் கோரிக்கை விடுக்கின்றது.

எதற்காக???

எதிர்காலத்திற்காக மின்சாரத்தை சேமித்து வைப்பதற்கும், எதிர்நோக்கியுள்ள நெருக்கடியில் இருந்து மீட்சி பெறுவதற்காகவும் அரசாங்கம் பொதுமக்களிடம் இவ்வாறு கோரிக்கை விடுத்து வருகின்றது.

ஆனால்....
அதே அரசாங்கத்தின் உள்ளூராட்சி மன்றக் கட்டமைப்பான கண்டி மாநகர சபை பிரிவிற்குட்பட்ட கண்டி ரயில்வே நிலையத்திற்கு முன்பாகவுள்ள வீதியொன்றில் பகல் வேளையில் வீதி மின்விளக்கு எரிந்துகொண்டிருந்த காட்சி என் கமராவிற்குள் பதிவானது.



இதுபோன்று நாட்டின் பல இடங்களிலும் பகல் வேளைகளில் மின்குமிழ்கள் எரிந்துகொண்டிக்கின்றன என்பதை ஊகித்தறிய முடியும்.

இவ்வாறு மக்களின் வரியிலிருந்து ஊதியம் பெறுகின்ற மக்கள் பிரதிநிதிகள்... அரசாங்க ஊழியர்கள்... மின்சார சபையின் ஊழியர்கள் ஏன் தங்களின் பொறுப்புகளை உணர்ந்து செயற்படுவதில்லை?

இன்று அமைச்சுகளிலும், திணைக்களங்களிலும், ஏனைய அரசாங்க நிறுவனங்களிலும் தான் பெரும்பாலும் மேலதிக மின்விளக்குகள் தேவையின்றி ஒளிரச்செய்யப்பட்டு மின்சாரம் விரையமாக்கப்படுகின்றது. என்பதே மிகப் பொருத்தமானதும், உண்மையும் ஆகும்.

எவ்வாறாயினும், அவர்களைக் குறைகூறுவதில் எவ்வித பயனும் இல்லையென்றே எண்ணத் தோன்றுகிறது.... சொல்லப் போனால் உனக்கென்ன கவலை... உன் வேலையப் பாருன்னு அட்வைஸ் வேற....

மக்களும் இதுபோன்ற விடயங்கள் குறித்து பொதுவாக சிந்திப்பதாக தெரியவில்லை...

யாரிடம் தான் சொல்வதோ....???

2 Comments

  1. இதில என்ன தப்பு............மகிந்த சிந்தனையில் எதுவுமே தப்பில்லை........

    ReplyDelete
    Replies
    1. தப்பை தப்பின்றி செய்தால் எதுவுமே தப்பில்லை...

      Delete

Post a Comment

Previous Post Next Post