11 ஆவது உலகத் தமிழ்ப் பண்பாட்டியக்க மாநாடு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 24 ஆம், 25 ஆம் திகதிகளில் பிரான்ஸின் எவ்ரியில் நடைபெறவுள்ளது


இந்த மாநாட்டில் உலகப் புகழ் தமிழ் அறிஞர்கள் உட்பட 300க்கு மேற்பட்ட பேராளர்களும், பார்வையாளர்களும் பங்குபற்ற உள்ளனர் என சர்வதேச தகவல்கள் குறிப்பிடுகின்றன.

புலம் பெயர் தமிழரின் தமிழ்மொழி அறிவு, தமிழ்ப்பண்பாடு, நாகரீகம் ஆகியவற்றைப் போற்றுவதிலும் அடுத்த தலைமுறைக்கு அவற்றை எடுத்துச்செல்வதிலும், பொருளாதார, சமூகத்துறைகளில் மேம்பாடு காண்பதிலும் உள்ள சவால்களை எதிர்கொண்டு முனைப்புடன் செயற்படும் நோக்குடன் இம்மாநாடு நடைபெறவுள்ளது. 

செப்டெம்பர் 24ஆம் திகதி ஆய்வரங்கமும், 25ஆம் திகதி உலகப்புகழ் பெற்ற தமிழ்த்துறை அறிஞர்களின் விசேட உரைகள் உட்பட ஓவியக் கண்காட்சி நிகழ்ச்சிகளும் இடம் பெறவுள்ளன.

1 Comments

  1. கண்ணா18 July 2011 at 18:08

    11 ஆவது உலகத் தமிழ் பண்பாட்டியக்க மாநாடு சிறப்பாக நடைபெற நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post